close
Choose your channels
DJ
DJ

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்.. அதிருப்தியில் ஆர்மி

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வாரம் கதிரவன், ஜனனி, ரக்சிதா, தனலட்சுமி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் நாமினேஷன் பட்டியலில் உள்ள குயின்ஸி மற்றும் மைனா குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குயின்ஸி என தகவல் வெளியாகி உள்ளன. இதனால் குயின்ஸி ஆர்மியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக குயின்ஸி மீது பார்வையாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அந்த அதிருப்தியின் வெளிப்பாடு தான் தற்போது அவரை வெளியேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.