close
Choose your channels
Por
Joshwa

யாரைடா சிம்ப்ளி வேஸ்ட்டுன்னு சொல்றிங்கடா டேய்.... மைனா ஆவேசம்

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் இந்த முறை வித்தியாசமாக 24 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்று தெரிந்ததே.

இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் ஜிபி முத்து தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த வாரம் குவின்ஸி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பிக் பாஸ் சற்றுமுன் வெளியான வீடியோவில், ‘பிக்பாஸ் மணிகண்டனை அழைத்து சென்ற இரண்டு பதாகைகளை கொடுத்து அந்த இரண்டையும் அசீம் மற்றும் மைனா ஆகியோர் கழுத்தில் அணிய செய்யும்படி கூறுகிறார். அந்த பதாகையில் ‘சிம்ப்ளி வேஸ்ட்’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனையடுத்து மணிகண்டன், அசீம் மற்றும் மைனாவின் கழுத்தில் அந்த பதாகையை போடுகிறார். இதை பார்த்த மைனா, ‘யாரட சிம்ப்ளி வேஸ்ட்டுன்னு சொல்றிங்கடா டேய்.. இந்த வீட்டுல எவ்வளவு பேர் வேஸ்ட்டா உட்கார்ந்து இருக்கிங்கன்னு யோசிச்சு பாருங்கடா டேய்.. என்று கூறுகிறார்.

அதேபோல் ’இதுக்கெல்லாம் மசிகிற ஆள் நான் கிடையாதுடா டேய்.. என்று கூறுகிறார் உண்மையில் மைனா மற்றும் அசீம் ஆகிய இருவருக்கும் சிம்பிளி வேஸ்ட் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது ஏன் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.