close
Choose your channels
DJ
DJ

எனக்கும் ரக்சிதாவுக்கும் இருக்கும் உறவுமுறை இதுதான்: ராபர்ட் மாஸ்டர்

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் கடந்த ஞாயிறன்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் தனக்கும் ரக்சிதாவுக்கும் இருக்கும் உறவுமுறை குறித்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் ஆரம்பம் முதலே ரக்சிதாவை மட்டுமே குறி வைத்து விளையாடினார் என்பதும் அவரது காதல் பார்வை ஆரம்பத்தில் பார்வையாளர்களுக்கு சுவாரசியமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் திருமணமான பெண்ணிடம் எல்லைமீறியதாகவும் கண்டனங்கள் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்ட ராபர்ட் மாஸ்டர் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்

மேலும் எனக்கும் ரக்சிதாவுக்கும் இருக்கும் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்றும் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறு மாதிரி தோன்றினாலும், எங்கள் இருவருக்கும் உள்ள உறவுமுறை வெறும் நட்பு மட்டும் தான் என்றும் அவர் தனிமையில் இருக்கும்போது நான் சென்று அவரிடம் பேச ஆரம்பித்தேன் அப்படியே நட்பு வளர்ந்தது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.