close
Choose your channels
PKK

'பாரதி கண்ணம்மா' அருண் பிரசாத் காதலி இந்த சீரியல் நடிகையா? வைரல் புகைப்படம்!

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியலில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வருவது ’பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் ஆகிய இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரோஷினி தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டதால் அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ’பாரதி கண்ணம்மா’ நாயகனாக அருண் பிரசாத்துக்கும் ’ராஜா ராணி 2’ தொடரில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவுக்கும் காதல் என்று விஜய் டிவி வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழுந்தன. இதனை அடுத்து இருவரும் காதலிப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானாலும் இருவரும் இணைந்த புகைப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அருண் பிரசாத், அர்ச்சனா ஆகிய இருவரும் இணைந்து உள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இவர்களுடன் ரித்திகாவும் இந்த புகைப்படத்தில் உள்ளார். இந்த புகைப்படத்தை அடுத்து அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.