close
Choose your channels
DJ
DJ

காலையில் இருந்து என்னை சுத்தி என்னென்னமோ நடந்துகிட்டு இருக்கு: பரத்தின் 'லவ்' டீசர்

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பரத். தற்போது 50வது படமான ’லவ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பரத் ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ள இந்த படத்தை ஆர்பி பாலா இயக்கியுள்ளார்.

த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு மரணத்தை அடுத்து அந்த உடலை எப்படி அகற்றுவது என்பது குறித்த சிக்கலில் ஹீரோ இருப்பதாக தெரிகிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இந்த படம் அமைந்துள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரத், வாணிபோஜன், விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரான்னி ரபேல் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில், அஜய் மனோஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.