close
Choose your channels
Viruman
Laal

பரத்தின் 50வது படத்தில் பிரபல நடிகை:  பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பரத்தின் 50வது படத்தில் நாயகியாக பிரபல நடிகை நடிக்க இருப்பதை அடுத்து இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது.

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


 

லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

அறிமுக இயக்குனர் ஆர்பி பாலா இயக்கத்தில், ரான்னி ரபேல் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில், அஜய் மனோஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.