close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி:  இன்று பூஜை!

Thursday, February 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே பிரபாஸ் நடித்து முடித்துள்ள ‘ராதேஷ் யாம்’ சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ மற்றும் பாலிவுட்டில் தயாராகிவரும் ’சர்க்கஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்ட நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே`மகேஷ்பாபுவுடன் ‘மகரிஷி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க உள்ளார் என்பதும் தமன் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகேஷ்பாபுவின் 28வது படமான இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.