close
Choose your channels
enpt
mraja

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்..!

Saturday, December 7, 2019 • தமிழ் Comments

அமெரிக்காவில் ஒரு வாழைப்பழம் ரூ85 லட்சத்தற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சம்பத்தில் நடந்துள்ளது.

மக்கள் வித்தியாசமான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். குறிப்பாக ஒவியங்களை கோடி கணக்கில் பணம் கொடுத்தும் வாங்கும் மக்கள் இந்த உலகில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.சில ஓவியங்கள் எதுவுமே புரியாது. ஆனால் அது பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அமெரிக்காவில் சுவரில் ஒரு வாழைப்பழத்தை வைத்து அதை டேப்போட்டு ஓட்டி அதை ஏலம் விட்டனர். அதை மக்கள் 1.20 லட்சம் அமெரிக்கா டாலருக்கு ஏலம் எடுத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.புகழ்பெற்ற வித்தயாசமான பொருட்களை தயாரிக்கும் கலைஞர் மெளரிஸியோ கேட்டலியன் இவர் ஏற்கனவே தங்கத்தில் டாய்லெட்டை வடிவமைத்து அதற்கு அமெரிக்கா என பெயரிட்டார். அந்த டாய்லெட் லண்டனில் ஒரு அரண்மையில் பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட சில நாட்களிலேயே திருடும்போனது. டாய்லெட் தயாரித்தை விட அது திருடு போனது தான் பெரும் பிரபலமானது.

அவர் தான் தற்போது இந்த வாழைப்பழத்தையும் விற்பனைக்கு கொண்டு வந்தார். வாழைப்பழத்தை சுவற்றில் ஒரு டேப் போட்டு ஒட்டி அதை ஏலத்திற்கு கொண்டுவந்தார்.அதை மக்கள் 1.20 லட்சம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ 85 லட்சத்திற்கு விலை போய் உள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாகியுள்ளது. 

Get Breaking News Alerts From IndiaGlitz