close
Choose your channels

9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம்...! காதல் பட இயக்குனரின் அடுத்த அப்டேட்....!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments

இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழில் பிரபலமான இயக்குனர்களுள் பாலாஜி சக்திவேலும் ஒருவர். சந்தியா, பரத் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான "காதல்" திரைப்படம் பிரமாண்ட ஹிட். கமர்ஷியலாக வந்து கொண்டிருந்த படங்களுக்கு மத்தியில், இப்படம் எதார்த்த காதல் வாழ்க்கையை எடுத்து கூறியிருந்தது. இதே போல் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் வழக்கு என் 18/9. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதற்கிடையில் யார் இவர்கள், ர ர ராஜசேகர் என்ற இரு படங்களை எடுப்பதாக அறிவித்ததோடு சரி, இதைப்பற்றி பின்பு எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு பாலாஜி சக்திவேல் "நான் நீ நாம்" என்ற படத்தை இயக்குகிறார். இதில் வீரா, சாந்தினி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க, ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஜாவித் ரியாஸ் இப்படத்திற்கு இசையமைக்க யுகபாரதி மற்றும் லலிதானந்த் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுகிறார்கள். ப்ளூமூன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz