close
Choose your channels
DT
BJP

பாலா-ஜிவி பிரகாஷின் 'நாச்சியார்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, November 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் படமான 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இயக்குனர் பாலா தற்போது விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ள வர்மா' படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் நாச்சியார் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் நவம்பர் 15ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை பாலாவின் 'பி ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஈஸ்வர் ஒளிப்பதிவில், சதிஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.