close
Choose your channels

'பாண்டவர் இல்லம்' நடிகைக்கு நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்!

Friday, October 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாண்டவர் இல்லம்’ என்ற சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமான நிலையில் ஐந்தாவது மாதத்தில் நடந்த வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அவை இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று ‘பாண்டவர் இல்லம்’ என்பது அனைவரும் அறிந்ததே. ஐந்து அண்ணன் தம்பிகள் இடையே நடக்கும் பாசப் போராட்டம் கொண்ட இந்த சீரியலில் ஐந்து நடிகைகள் மருமகள்களாக நடித்து வருகின்றனர். நகைச்சுவை மற்றும் குடும்பப்பாசம் கொண்ட இந்த சீரியல் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வரும் அனு சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு தற்போது ஐந்தாவது மாதம் என்பதால் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

இந்த வளைகாப்பு புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பதிவில் அவர் கேப்ஷனாக, ‘வளைகாப்பு நிகழ்ச்சி எங்கள் வீட்டில் நடந்தது. எங்கள் குழந்தையை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது குடும்பத்தினரின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.