close
Choose your channels

'பாகுபலி' புகழ் பிரபாசுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்த பிரபாசுக்கு இந்த இரண்டு படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்றார் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக வட இந்திய நாயகன்களான கான் நடிகர்களுக்கு இணையான புகழை பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு இன்னொரு சிறப்பு அங்கீகாரம் தற்போது தேசிய அளவில் கிடைத்துள்ளது.

சமீபத்தில் GQ என்ற இதழ் வெளியிட்டுள்ள “அதிக செல்வாக்கு நிறைந்த இளம் இந்தியர்கள்” என்ற தரவரிசைப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார் பிரபாஸ். இந்த சாதனைக்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதிக செல்வாக்கு நிறைந்த இளம் இந்தியர்கள் பட்டியலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முதலிடத்தை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து பஞ்சாப் பாடகர் டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், 'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz