பிக்பாஸ் தமிழ்: இன்றைய அசீம் செயலால் வாக்குகள் சரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில வாரங்களாக அசீம் நாமினேஷன் பட்டியலில் இருந்தாலும் முதல் நபராக சேவ் ஆகி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். முதல் இரண்டு வாரங்கள் அவரது செய்கை சற்று மோசமாக இருந்தாலும் கமல்ஹாசன் கண்டிப்புக்கு பின் அவர் நியாயமாக விளையாடி வந்தார். அதனால் அவர் நாமினேஷனில் இருந்தாலும் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் தற்போது அசீம் மீண்டும் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளா. குறிப்பாக இன்று அவர் விக்ரமனுடன் சண்டை போட்டது, ஒருமையில் பேசியது ஆகியவை அநாகரீகத்தின் உச்சமாக இருந்ததாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக முதல் நபராக சேவ் செய்யப்பட்ட அசீமுக்கு வாக்குகள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் அசீம் உள்பட 7 பேர் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் அசீமுக்கு வாக்குகள் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
பிக்பாஸ் நான்காவது சீசனில் ஆரியிடம் சண்டை போட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தது போலவே இந்த சீசனில் விக்ரமனுடன் சண்டை போட்ட மகேஸ்வரி கடந்த வாரம் எவிக்சன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் அசீம் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.