close
Choose your channels

திருமண மண்டபமாக மாறுகிறது ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி! பரபரப்பு தகவல்

Friday, September 4, 2020 • தமிழ் Comments

ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்ட நிலையில் சமீபத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த ’கார்டன் ஸ்டூடியோ’ திருமண மண்டபமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஏவிஎம் ஸ்டூடியோவில் கடந்த சில வருடங்களாக படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறவில்லை. அதேபோல் டப்பிங் தியேட்டரிலும் அரிதாகவே டப்பிங் பணிகளும் நடைபெறுகிறது. இதனை அடுத்து காலத்திற்கு ஏற்ற மாதிரி மாறும் நோக்கத்தில் சமீபத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்பட்டு வேறு வடிவமாக கட்டப்பட்டு வருகிறது.

அதேபோல் தற்போது அடுத்த கட்டமாக ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த கார்டன் ஸ்டூடியோ’ தற்போது திருமண மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. பரந்து விரிந்த புல்வெளி, அதற்கு நடுவே ஒரு வட்ட வடிவமான மண்டபம் உள்ள இந்த கார்டன் ஸ்டூடியோ ஆயிரக்கணக்கான படங்களில் இடம்பெற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கார்டன் ஸ்டூடியோ’வில் நடந்ததாகவும் இதுவே இங்கு நடந்த கடைசி படப்பிடிப்பு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz