close
Choose your channels
Don
Nenjukku Needhi

மனைவியின் பிறந்தநாளில் அட்லியின் நெகிழவைக்கும் ரொமான்ஸ் பதிவு!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவியின் பிறந்தநாளை ஒட்டி நெகிழவைக்கும் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’தெறி’, ‘மெர்சல் மற்றும் ‘பிகில்’ ஆகிய மூன்று தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி என்பது தெரிந்ததே. தற்போது அவர் ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை அட்லி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது மனைவி ப்ரியா அட்லியின் பிறந்தநாளை அடுத்து அட்லி தனது இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ் மற்றும் நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு நீதான். கடவுள் எனக்கு மனைவி மற்றும் மகள் ஆக இருக்கும் தேவதையை அனுப்பியுள்ளார். உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அட்லி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.