close
Choose your channels

மீண்டும் கபடி பிளேயராக நடிக்கும் தமிழ் ஹீரோ: டைட்டில் குறித்த தகவல்!

Friday, March 12, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகில் கபடி குறித்த விளையாட்டு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்பதை பார்த்து வருகிறோம். தளபதி விஜய்யின் ’கில்லி’ சுசீந்திரனின் ’வெண்ணிலா கபடி குழு’ உள்பட ஒருசில படங்களை உதாரணமாகக் கூறலாம், அந்த வகையில் தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா, ஏற்கனவே ’குருதி ஆட்டம்’ என்ற திரைப்படத்தில் கபடி பிளேயர் ஆக நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர் கபடி பிளேயர் கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனர் சற்குணம் இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டில் ’பொத்தேரி’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கபடி கோச்சராக ராஜ்கிரன் நடித்து வருவதாக தெரிகிறது, ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘சண்டிவீரன்’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக உண்மையாகவே அதர்வா கபடி பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி திருப்பங்கள் மற்றும் டுவிஸ்டுகள் கொண்ட இந்தத் திரைப்படம் அதர்வாவுக்கு ஒரு திருப்புமுனையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz