அப்பாவின் பெயரையே அடுத்த படத்திற்கு வைத்த நடிகர் அதர்வா.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் முரளியின் மகன் அதர்வா தனது அடுத்த படத்திற்கு அப்பாவின் பெயரையும், அவரது சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலையும் சேர்த்து வைத்துள்ள நிலையில், இது குறித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான அதர்வா, சமீபகாலமாக புதிய திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’பராசக்தி’ திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதர்வா நடிக்கும் அடுத்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை, நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமன் இசையில் உருவாகும் இந்த படத்தில், அதர்வா நாயகனாக நடிக்கிறார். நட்டி நடராஜ், ப்ரீத்தி முகுந்தன், காயடு லோகர் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தற்போது ’இதயம் முரளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ’இதயம்’ என்பது, அதர்வா தந்தை முரளி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகும். தனது அப்பாவின் பெயரையும், அவர் நடித்த சூப்பர் ஹிட் படத்தையும் சேர்த்து, இந்த படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Unveiling the First Look of #IdhayamMurali - The One Side💖@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @Kayadulohar @Dop_Sai @rakshan_vj @JustNiharikaNm @Actor__SUDHAKAR @AngelinB3 @Dravid_Selvam @PragyaNagra @jonitamusic @manojdft… pic.twitter.com/KIdGfXx2tz
— DawnPictures (@DawnPicturesOff) February 13, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com