மூன்று மொழிகளில் ரீமேக் ஆகும் 'ஈட்டி'
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கிய ஈட்டி' கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அதர்வாவின் நடிப்பு, ஸ்ரீதிவ்யாவின் அழகு, ரவி அரசுவின் அழுத்தமான திரைக்கதை, ஜி.வி.பிரகாஷின் அபாரமான பின்னணி ஆகியவை ஒருங்கே இந்த படத்தில் அமைந்துள்ளதால் வெற்றிப்படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் 'ஈட்டி' படம் மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியில் சாஹித் கபூரும், தெலுங்கில் நிதினும், கன்னடத்தில் யாஷும் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு ரீமேக்கை தமிழில் தயாரித்த குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் மைக்கேல் ராயப்பன் அவர்களே தயாரிக்கவுள்ளதாகவும், தமிழில் இயக்கிய ரவி அரசு தெலுங்கிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.