close
Choose your channels

அதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments

'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வந்த இந்த படம் ‘நின்னுகோரி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் ‘தள்ளி போகாதே’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘தள்ளி போகாதே’ பாடல் மிகப்பெரிய ஹிட் என்பது தெரிந்ததே.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் கோபி சுந்தர் இசையில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரடொக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz