close
Choose your channels

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மைதானத்திலேயே ஸ்டெப் போட்ட அஸ்வின்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று அபாரமாக வெற்றி பெற்றது. 482 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களில் சுருண்டு விட்டதால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமாக சதம் அடித்ததோடு முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது மைதானத்தில் இருந்த அஸ்வின், தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் போலவே ஸ்டெப் போட்டது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz