close
Choose your channels

'அசுரன்' படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

Thursday, August 22, 2019 • தமிழ் Comments

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷனும் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதேபோல் இந்த படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்

இந்த நிலையில் 'அசுரன்' திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் லுக் இன்று மாலை 6.02 மணிக்கு வெளியாகும் என்பதே தனுஷின் அப்டேட் ஆகும். தனுஷின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா,  பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz