close
Choose your channels
NMM

'அஜித் 61' படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’அஜீத் 61’ திரைப்படத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

'அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாசாலை செட்டில் பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது .

மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.