close
Choose your channels
Por
Joshwa

சிம்பு ரேஞ்சுக்கு பேசுறீங்க.. அந்த அளவுக்கு இன்னும் போகல.. அசோக்செல்வனின் 'சபாநாயகன்' டிரைலர்..!

Friday, December 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘சபாநாயகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சபாநாயகன்’ திரைப்படத்தை கார்த்திகேயன் இயக்கி உள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையில் உருவாகி உள்ள இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கல்லூரியில் படிக்கும் அசோக் செல்வனுக்கு ஏற்படும் காதல், அந்த காதலால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவை காமெடியாக கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு வெளியாகியுள்ள அசோக் செல்வன் முதல் படம் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலரை அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.