close
Choose your channels
RaRa

விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்யா

Monday, October 17, 2016 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் சிறந்த நண்பர்கள் ஆர்யாவும் விஷாலும் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலின்போது நண்பன் விஷாலுக்காக ஆர்யா செய்த பணிகளுக்கு அளவே இல்லை. இந்நிலையில் திடீரென விஷாலுக்கு எதிராக ஆர்யா களமிறங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், ஆனால் நிஜத்தில் அல்ல, திரையில்தான் விஷாலுக்கு வில்லனாகிறார் ஆர்யா. அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் 'இரும்புத்திரை' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஷாலுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஆர்யா வில்லனாக நடிப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz