close
Choose your channels
cred

நலன்குமாரசாமியின் அடுத்த படத்தின் நாயகன் இந்த பிரபல நடிகரா?

Sunday, February 28, 2021 • தமிழ் Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சூதுகவ்வும்’ ’காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவர் சமீபத்தில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் ஒரு பகுதியை இயக்கினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நலன் குமாரசாமி தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இவருடைய அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

ஆர்யா இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நலன் குமாரசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக அவர் ஒரு புதிய அவதாரம் எடுக்க இருப்பதாகவும், இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான பாணியுடன் கூடிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஆர்யா ஏற்கனவே நடித்து முடித்துள்ள ’சார்பேட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் மேலும் விஷாலுடன் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz