close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

சித்தார்த் நடித்த 'அருவம்' சென்சார் தகவல்கள்

Wednesday, October 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சித்தார்த் நடித்த ‘அருவம்’ திரைப்படத்தின் புரமோஷன் வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக உணவுக்கடைகள் சீல் வைக்கப்படும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 128 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த், கேதரின் தெரசா, கபீர்சிங், சதீஷ், ஆடுகளம் நரேன், ஸ்டண்ட் சில்வா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சாய்சேகர் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்டை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.