லேபில்' சீரிஸின் நான்காவது எபிசோட்.. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'லேபில்' சீரிஸின் நான்காவது எபிசோட் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர்கள் ஜெய் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சீரீஸ், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.
மாறுபட்ட களத்தில், அழுத்தமான கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லும் இந்த பரபரப்பான சீரிஸ் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் முதல் வெப் சீரிஸான லேபில் சீரிஸின் முதல் மூன்று எபிசோடுகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நவம்பர் 10 அன்று ஸ்ட்ரீம் செய்தது. முதல் மூன்று எபிசோடுகள் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தற்போது நான்காவது எபிஸோடை ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. ரசிகர்களிடம் பேசுபொருளாக பிரபலமடைந்து வரும் இந்த சீரிஸின், ஒவ்வொரு புதிய எபிஸோடும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
மூன்றாவது எபிசோட், வட சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபா, ஒரு கொலை வழக்கில் சிறைக்குச் செல்லும் வீரா மற்றும் குமார் ஆகிய இரு இளைஞர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டியது. ஆனால், தவறான வழி நடத்தையில் இருக்கும் இளைஞர்கள், லேபில் பட்டத்தை பெறும் ஆசையில், மேலுமொரு பயங்கரமான சம்பவம் ஒன்றைச் செய்கிறார்கள்.
நான்காவது எபிஸோடில் அந்தச் இளைஞர்களின் கணக்குகள் எப்படி தவறாக முடிகிறது, என்பதைக் காட்டுகிறது. லேபில் பட்டம் கிடைப்பதற்கு பதில் அவர்கள் மீது மரண நிழல் சூழ ஆரம்பிக்கிறது. ஒரு புறம் மோசமான ரௌடி கும்பல் இன்னொருபுறம் காவல்துறையினர் அவர்களை கொலை செய்ய முயல்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை மீட்க பிரபா என்ன செய்யப் போகிறான் ?
இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.
லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments