close
Choose your channels

அருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

Monday, May 17, 2021 • தமிழ் Comments

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அருண்ராஜா காமராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சி செய்தியாக அருண்ராஜா காமராஜ் அவர்களின் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து அருண்ராஜா காமராஜ் சகோதரர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அவர்களின் சகோதரர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz