close
Choose your channels
Viruman
Laal

3 நாட்களில் இத்தனை கோடியா? அருண்விஜய்யின் 'யானை'  பட வசூல் விபரங்கள்!

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்த உடனே ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை இந்த படத்திற்கு தர ஆரம்பித்தன. மேலும் படம் பார்ப்பவர்களும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் இந்த படத்தை பிரபலமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘யானை’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சேர்த்து இந்த படம் உலகம் முழுவதும் 9 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடியும், தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியா மற்றும் உலக நாடுகளில் 4.5 கோடி என மொத்தம் ஒன்பது கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அதிகம் இருப்பதால் இந்த படம் அருண்விஜய்யின் படங்களில் புதிய சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.