அருள்நிதி அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு: ரிலீஸ் எப்போது?


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’வம்சம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான அருள்நிதி அதன்பின்னர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அருள்நிதி நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ’டி ப்ளாக்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அருள்நிதியின் டி ப்ளாக்’ திரைப்படம் தற்போது சென்சாருக்கு சென்று ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. சென்சார் சான்றிதழ் தகவலுடன் மாஸ் ஸ்டில் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் விருஷ் என்பவர் இயக்கத்தில் அரவிந்த் சிங் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அருள்நிதியின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#DBlock ❤ pic.twitter.com/tSS8n96pGm
— Arulnithi tamilarasu (@arulnithitamil) December 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.