ரஜினியால் நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டரில் திடீர் மாற்றம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அவர்களை நியமனம் செய்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள அர்ஜுன மூர்த்தி அவர்கள் தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவர் பதவியில் இருந்து வருகிறார் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின
இதனையடுத்து அவர் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் என்று குறிப்பிட்டு இருந்ததை நீக்கிவிட்டு ’தற்போது தலைவருடன் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் ’தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் பாஜகவில் இருந்து விலகி ரஜினியின் கட்சிக்கு மாறி உள்ளதாக தெரிகிறது
அதேபோல் காந்திய மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்திவரும் தமிழருவி மணியன் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது அமைப்பை ரஜினி கட்சியுடன் இணைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்?? pic.twitter.com/pHvKLZzmaU
— Arjunamurthy Ra (@RaArjunamurthy) December 3, 2020