close
Choose your channels

வேற்று கிரகவாசிகள் தங்கும் Area 51- அமெரிக்காவில் நீடிக்கும் மர்மம் என்ன?

Sunday, July 18, 2021 • தமிழ் Comments

அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான Area 51 எனும் இடத்தைப்பற்றி பல சுவாரசியத் தகவல்கள் ஊடகங்களில் அவ்வபோது வெளியாகி வருகின்றன. அதுவும் வெளியுலகிற்கு தெரியாத Area 51 எனும் இடத்தில் வேற்று கிரகவாசிகள் தங்கி இருப்பதாகவும் அவர்களை பற்றிய ஆய்வுகள் நடப்பதாலேயே அந்த இடத்தை அமெரிக்க அரசு மறைத்து வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் பல ஆவணப்படங்களும் திரைப்படங்களும் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் Men in Black எனும் பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் வேற்றுக் கிரகவாசிகள் Area 51இல் தங்கி இருப்பதைப் போன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். கூடவே ஆள் அரவம் இல்லாத அந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.

இதனால் Area 51ஐ பற்றிய மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் அமெரிக்க அரசு ஏன் இந்த இடத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறது எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது. நெவாடாவில் உள்ள இந்த மர்மமான இடமானது ராணுவச் சோதனை தளம் மற்றும் விமானப்படை மையமாகப் பயன்படுத்த படுவதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த மர்ம இடத்தில் அமெரிக்க அரசு என்ன செய்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் Area 51 எனும் இடத்தில் வெளியாட்கள் யாருக்கும் அனுமதி வழங்கப் படுவதில்லை. ஒருவேளை இந்த இடத்தில் அனுமதியின்றி வெளியாட்கள் சென்றால் அவர்களைச் சுட்டுத்தள்ளவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுபோன்ற தகவல்களை அடுத்து Area 51ஐ பற்றிய மர்மம் மேலும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கடந்த 1955 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு தன்னுடைய ஆவணங்களை சேகரித்து வைப்பதற்கு ஒரு ரகசிய இடத்தை தேடிக்கொண்டு இருந்ததாகவும் அப்போது Area 51 எனும் ரகசியம் இடம் நெவாடா அருகே உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய மர்ம தேசத்தைப் பற்றி கடந்த 1967 சிஐஏ இயக்குநர் ஒருவர் தற்செயலாக ஊடகத்திடம் தெரிவித்து விட்டார். அதற்குப் பின்பே Area 51 பற்றிய சுவாரசியங்கள் வெளியுலகில் உலா வரத்துவங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz