close
Choose your channels
Anbirkiniyaal

அரவிந்தசாமியின் மகன், மகள்: இண்டர்நெட்டில் வைரலாகும் புகைப்படங்கள்!

Monday, January 25, 2021 • தமிழ் Comments

தமிழ் சினிமாவில் அழகான நடிகர்களில் ஒருவரும் கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி ஹீரோவாக இருந்தவருமான அரவிந்த்சாமியின் மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

மணிரத்னம் இயக்கிய ’தளபதி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் அகில இந்திய ஸ்டார் ஆனார் அரவிந்த்சாமி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது என்பதும் அவர் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரியான அரவிந்த்சாமி, அதன்பின் ‘தனி ஒருவன்’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்து இப்போதும் பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார். குறிப்பாக விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்து வரும் அரவிந்தசாமிக்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரவிந்த்சாமி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமான, ஆக்கபூர்வமான பதிவுகளை செய்து வரும் நிலையில் சமீபத்தில் தனது மகன், மகள் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக அரவிந்த்சாமியின் மகன் பட்டம் பெற்றபோது எடுத்த ஒரு புகைப்படமும், அரவிந்த்சாமி தனது மகளுடன் சைக்கிளில் செல்லும் புகைப்படமும் தற்போது இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz