close
Choose your channels

'அரண்மனை 3' படம் குறித்த ஆச்சரியமான வியாபாரம்!

Saturday, October 9, 2021 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ’அரண்மனை 3’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’அரண்மனை 3’ படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ’அரண்மனை 3’ படத்தில் தென்னிந்திய மொழிகளின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஜீ5 நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான ’அரண்மனை 3’ படத்தின் டிரைலருக்கு பின்னர் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை 3’ திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz