close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு! பான்-இந்தியா திரைப்படம் என தகவல்

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ் அவர்கள் ’தளபதி 65’ படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் திடீரென அதில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஏஆர் முருகதாஸ் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் ஒரு பிரமாண்டமான திரைப்படம் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏஆர் முருகதாஸ் மற்றும் ஓம்பிரகாஷ் பட் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ’1947’ என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தை பொன்குமரன் என்பவர் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz