close
Choose your channels
Por
Joshwa

சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அனுஷ்கா? 50 வது படமாக அமையுமா?

Tuesday, November 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா தனது 50வது படமாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை அனுஷ்கா கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பாக தமிழில் அவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஐம்பதாவது படமாக அவர் ஏற்கனவே நடித்த சூப்பர் ஹிட் ஆன ’பாகமதி’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.