close
Choose your channels

'மாஸ்டர்' போல் ஒரு திரைப்படம் பாலிவுட்டுக்கு தேவை: இயக்குனர் அனுராக் பாசு

Monday, February 22, 2021 • தமிழ் Comments

தமிழில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் பொதுமக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததுபோல பாலிவுட்டிலும் ஒரு படம் தேவை என பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு கூறியுள்ளார்.

மர்டர், கேங்ஸ்டர், கைட்ஸ், உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுராக் பாசு தற்போது ’லூடோ’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் திரையரங்குகளுக்கு இன்னும் ரசிகர்கள் சகஜமாக வரவில்லை என்றும் திரையரங்குக்கு ரசிகர்களை வரவழைக்க ஒரு பெரிய படம் வெளியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கில் ’மாஸ்டர்’ படம் வெளியாகி அந்த பகுதி மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் இங்கும் திரையரங்குக்கு பொதுமக்கள் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

‘லூடோ’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்தேன் என்றும் ஆனால் அது முடியாததால் வேறு வழியின்றி ஓடிடியில் வெளியிட இருப்பதாகவும் அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz