அனிதாவுக்கு ஸ்ட்ராங், சனம்ஷெட்டிக்கு லைட்: வைரலாகும் புகைப்படம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


105 நாட்களாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி மற்றும் பாலாஜி வின்னர் மற்றும் ரன்னராக வெற்றி பெற்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு ’பிக்பாஸ் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்படும் என்பதும், இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு ஜாலியாக கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்தது
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 கொண்டாட்டமும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனிதா சம்பத் பதிவு செய்துள்ளார்
அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு கப் காபிகளை பதிவு செய்து அதில் ஸ்ட்ராங்காக இருக்கும் காபி தன்னுடையது என்றும் லைட்டாக இருக்கும் காபி சனம்ஷெட்டியுடையது என்றும் ’பிக்பாஸ் கொண்டாட்டம் ஷோ’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த புகைப்படம் பிக்பாஸ் கொண்டாட்டம் ஷோ படப்பிடிப்பின்போது எடுத்தது என்பது தெரிகிறது
அதேபோல் சனம்ஷெட்டியும் தனது டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான லுக் உள்ள புகைப்படத்தை பதிவு செய்து பிக்பாஸ் கொண்டாட்டம் லுக் எப்படி இருக்கிறது? என்று கேட்டுள்ளார் இதிலிருந்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது என்றும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.