close
Choose your channels

ஜெயம் ரவி படத்தில் இணைந்த அனிருத்: பரபரப்பு தகவல்

Monday, September 7, 2020 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

என்ற இந்த பாடலின் 18 வினாடி புரமோ வீடியோவையும் டி.இமான் வெளியிட்டார் என்பதும், இந்த புரமோ வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த பாடலை பாடியது அனிருத் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இடந்த பாடலை அனிருத் பாடுவது போன்ற வீடியோ சற்றுமுன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தின் அட்டகாசமான குரலில் இந்த பாடல் சூப்பர்ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz