close
Choose your channels
Por
Joshwa

என் வாழ்க்கையில் இந்த படத்தின் பின்னணி இசை தான் பெஸ்ட்.. அனிருத் கூறிய ஆச்சரிய தகவல்..!

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் வாழ்க்கையில் நான் இதுவரை கம்போஸ் செய்த பின்னணி இசையில் இந்த படத்திற்கு அமைத்த பின்னணி இசை தான் பெஸ்ட் என இசையமைப்பாளர் அனிருத் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத், தனுஷ் நடித்த ’3’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் அவர் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இசையமைத்து வரும் படங்களில் ஒன்று ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ என்பதும் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் பணியை முடித்துவிட்டு அவர் தற்போது பின்னணி இசை பணிகளை செய்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தான் இதுவரை கம்போஸ் செய்த பின்னணி இசையில் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்திற்கு கம்போஸ் செய்த பின்னணி இசை தான் பெஸ்ட் என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின் நிறுவனம் தயாரித்துள்ளது, வரும் ஜூன் 2ஆ, தேதி இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.