'குட்டி சுவத்த எட்டி பார்த்தா... நாளை சென்னையில் அனிருத் இசையாட்டம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசையமைப்பாளர் அனிருத் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில், "குட்டி சுவத்தை எட்டிப் பார்த்தா" என்ற இசை ஆட்டம் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இதனால் நாளை சேப்பாக்கம் இசையால் அரங்கமே அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் ஒரு வரிதான் "குட்டி சுவத்தை எட்டிப் பார்த்தால், உசுர கொடுக்க கோடி பேர்" என்ற பாடல் வரிகள். அந்த வரிகளில் சில வார்த்தைகளை எடுத்து "குட்டி சுவத்தை எட்டிப் பார்த்தால்" என குறிப்பிட்டு நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், டாடா ஐபிஎல் தொடங்கும் முன்னர் அனிருத் இசை கச்சேரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு இந்த இசை ஆட்டம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காணச் செல்லும் ரசிகர்களுக்கு, அனிருத்தின் இசை விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், முதல் போட்டி கொல்கத்தாவில், பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
நாளை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவும், அனிருத்தின் இசை விருந்தாகவும் என இரட்டை விருந்தாக அமையும்!
Kutti chevutha etti paatha 🔥🔥🔥
— Anirudh Ravichander (@anirudhofficial) March 22, 2025
Starting at 630 sharp tomo at Chepauk.. Pls be there nice and early for the alappara 🫡🫡🫡@IPL @BCCI @ChennaiIPL pic.twitter.com/N74szoGmLR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com