close
Choose your channels

ஆர்யா-சாயிஷா படத்தில் இணைந்த அனிருத்!

Sunday, January 26, 2020 • தமிழ் Comments

ஆர்யா-சாயிஷா படத்தில் இணைந்த அனிருத்!

 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத் மாஸ் நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தனது பிசியான இசைப் பணிகள் இடையே அவ்வப்போது அவர் மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் ஒரு சில பாடல்களை பாடி வருகிறார் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்து வரும் ’டெடி’ என்ற படத்தில் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார். பொதுவாக அனிருத் பாடும் பாடல்கள் எல்லாம் ராப் பாடல்கள் போல் மிக வேகமாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மெலடி பாடல் என்றும் இந்த பாடலை கம்போஸ் செய்த டி இமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் இந்த பாடல் இசை ரசிகர்களின் மனதை கவரும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz