close
Choose your channels
Conjuring Kannappa

இனிமேல் இப்படி நடந்தா கன்னத்திலே அறைவேன்.. கூல் சுரேஷ் குறித்து தொகுப்பாளினி..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினிக்கு திடீரென அவர் எதிர்பாராத வகையில் மாலை அணிவித்த நடிகர் கூல் சுரேஷ் செயல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் அந்த தொகுப்பாளினி இன்னொரு முறை இதுபோன்ற நடந்தால் கன்னத்தில் அறைவேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்சூர் அலிகான் நடித்த ’சரக்கு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது அதில் கூல் சுரேஷ் பேசினார். அவர் சரக்கு பாட்டிலை கையில் கொண்டு வந்து இந்த படத்தின் பெயர் இதுதான் என்று கூறியது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது.

இந்த நிலையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா, அதை கழட்டி தூக்கி எறிந்தது அந்த விழாவுக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தான் விளையாட்டாக தான் அதை செய்தேன் என்றும் அந்த பெண்ணின் மனதை காயப்படுத்துவதற்காக செய்யவில்லை என்றும் எனது செயலுக்கு நான் வருத்தப்படுகிறேன் என்றும் கூறி கூல் சுரேஷ் வீடியோ பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் இது குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா கூறிய போது ’கூல் சுரேஷ் எனக்கு மாலை போட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக என் தோள்பட்டையை பலவந்தமாக அழுத்தியவாறு நடந்து கொண்டார். அவர் இனிமேல் இது மாதிரி நடந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுக்காமல் விடமாட்டேன். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது, தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காதவாறு இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.