close
Choose your channels
Don
Nenjukku Needhi

சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும், குற்றாலத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பை இயக்குனர் பாண்டிராஜ் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ’வாடிவாசல்’ என்பதும் அந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் என்பதும் தெரிந்ததே. இந்த படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழகி வருகிறார் என்பதும் காளைகளை அடக்க பயிற்சி எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வை இயக்குனர் வெற்றிமாறன் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் ’வாடிவாசல்’ படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது அந்த படத்தில் அவருடைய கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. ’வாடிவாசல்’ திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பதும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.