close
Choose your channels
iruttu
Capmaari

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை அமலா!

Friday, November 1, 2019 • தமிழ் Comments

கடந்த 2000ம் ஆண்டுகளில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை அமலா. அதன் பின்னர் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்த பின்னர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகியிருந்தார் 

மேலும் நாகார்ஜூனன் மட்டுமின்றி நாகார்ஜூனா-அமலா தம்பதியின் மகன்களும் தெலுங்கு திரை உலகில் வெற்றிகரமாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அமலா நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

கைதி உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் முதல் தெலுங்கு படத்தில் அமலா முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் ஷர்வானந்த், ரித்து வர்மா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

தமிழ் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz