close
Choose your channels
PatamPoochi
mayoon

ரோட்டுக்கடையில் டிபன் சாப்பிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்: வைரல் வீடியோ!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் சாலையோரத்தில் இருந்த கூரை கடை ஒன்றில் டிபன் சாப்பிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தெலுங்கு பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது ’புஷ்பா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அல்லு அர்ஜுன் தனது குழுவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை கூரை கடை ஒன்றின் முன் நிறுத்தினார். அந்த கடையில் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் டிபன் நன்றாக இருந்தது என கடைக்காரரை பாராட்டி அவருக்கு பணம் கொடுத்துவிட்டு பின்னர் காரில் ஏறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ’புஷ்பா’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகுமார் இயக்கத்தில் தேவி பிரசாத் இசையில் உருவாகிவரும் இந்த படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.