close
Choose your channels
Rajavamsam

சினிமா துப்பாக்கியால் ஹீரோ சுட்டதில் ஒருவர் பலியான கோரச் சம்பவம்!

Friday, October 22, 2021 • தமிழ் Comments

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் சண்டை காட்சியில் நடித்தபோது போலி துப்பாக்கிக் கொண்டு சுட்டதில் ஒளிப்பதிவாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் படத்தின் இயக்குநரும் படுகாயம் அடைந்த நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

இயக்குநர் ஜோயல் சோசா இயக்கிவரும் “ரஸ்ட்” திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் நடித்துவருகிறார். இந்தப் படத்தையும் அலெக் பால்ட்வினே தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு நியூ மெக்சிகோவில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

ரஸ்ட் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது நடிகர் அலெக் பால்ட்வின் போலி துப்பாக்கியை வைத்துக் கொண்டு நடித்தார். ஆனால் போலி துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டால் ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் போலி துப்பாக்கியில் இருந்து வெளியான மற்றொரு குண்டால் இயக்குநர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹாலிவுட் படப்பிடிப்புகளில் ஏற்கனவே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. ப்ரூஸ் லீ யின் மகன் பிரான்டன் லீயும்  படப்பிடிப்பில் போலி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகர் அலெக் பால்ட்வின் படப்பிடிப்பிலும் இதுபோன்ற கோரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இதனால் “ரஸ்ட்“ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz