close
Choose your channels
NMM

ராமர் பாலத்தை காப்பாத்த நமக்கு வெறும் 3 நாள் தான் இருக்கு.. அக்சயகுமாரின் 'ராம் சேது' டீசர்

Saturday, October 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அக்ஷய் குமார் நடித்த ‘ராம் சேது’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள ராமர் பாலம் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் த்ரில் திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் ஆடம் பிரிட்ஜ் என்றும், புராண காலத்தில் இருந்து இராமர் பாலம் என்று கூறப்பட்டு வரும் இந்த பாலம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய செல்லும் ஒரு தொல் பொருள் ஆய்வாளரின் கதைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம், மேலும் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.