close
Choose your channels

சூப்பர் ஹிட் தமிழ் ரீமேக் படத்தில் அக்சய்குமார்?

Monday, January 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் சூப்பர் ஹிட் ஆகி வரும் படங்கள் இந்தியிலும் மற்ற மொழியிலும் ரீமேக் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் ஆனதோடு, ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்த 'காஞ்சனா 2' திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராகவா லாரன்ஸ், டாப்சி, நித்யாமேனன் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி தயாரித்த திரைப்படமான 'காஞ்சனா 2' திரைப்படம் ரூ.17 கோடியில் தயாராகி ரூ.120 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் கேரக்டரில் அக்சயகுமார் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஹாரர் காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாக அக்சயகுமார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் 'காஞ்சனா 2' திரைப்படத்தில் நடிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.