close
Choose your channels
iruttu
Capmaari

அஜித் 57' படத்திற்கு ஸ்டைலிஷ் பாலிவுட் வில்லன்

Thursday, October 20, 2016 • தமிழ் Comments

'தல அஜித்' நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் வில்லன் நடிகர் ஒரு பிரபலமான பாலிவுட் நடிகராகத்தான் இருக்கும் என் அனைவரும் ஊகித்த நிலையில், தற்போது இந்த படத்தின் வில்லன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரபல பாலிவுட் மற்றும் ஸ்டைலிஷ் நடிகர் விவேக் ஓபராய் தான் ''அஜித் 57' படத்தின் மெயின் வில்லனாக நடிக்கவிருக்கின்றார். விவேக் ஓபராய் தமிழுக்கு புதியவர் இல்லை. சூர்யா நடித்த 'ரத்த சரித்திரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அஜித், விவேக் ஓபராய் என்ற இரண்டு ஸ்டைலிஷ் நடிகர்கள், ஜேம்ஸ்பாண்ட் பாணி மியூசிக், சர்வதேச அளவில் கதையம்சம் ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz